• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

Juli 31, 2023

யாழில் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இத் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் சுதுமலை அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் வைரவர் கோவில் என நான்கு கோவில்களில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மானிப்பாய் பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்.நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டுள்ளதாகவும் குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed