• Mi.. Apr. 2nd, 2025 8:00:17 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எரிபொருள் விலை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

Juli 30, 2023

அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த விடயத்தை சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், இதனை முன்னிட்டு எரிபொருளுக்கான கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்காமல், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எரிபொருள் இருப்பை உறுதி செய்யாத எரிபொருள் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் 92 ஒக்டேன் பெட்ரோல் இருப்பை பேணாத 51 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், ஒட்டோ டீசல் இருப்பைப் பேணாத 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கமைய  அவற்றை உடனடியாக தங்களுக்கான எரிபொருள் கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed