• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சியில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு !

Juli 28, 2023

வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்றைய (27) தினம் உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை 5. 30 மணியளவில் வீட்டு பூஜை அறையில் பிரார்த்தனை ஈடுபட்டிருந்தபோது அவர் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். அவரைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியரால் தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா இம்மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற் கூற்று பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் இரசாயணப் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed