• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமியில் துளையை உருவாக்கும் சீனா..!

Jul 22, 2023

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக பூமியில் 10,000 மீற்றர் துளையை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்த முறை 10,000 மீற்றர் துளையை உருவாக்குவது இயற்கை எரிவாயு இருப்புகள் தொடர்பில் கண்டறிவதற்கே என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வியாழக்கிழமையில் இருந்து துளையிடும் பணியை துவங்கியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் இந்த துளையிடும் பணியானது முன்னெடுக்கப்படுகிறது.சுமார் 10,520 மீற்றர்கள் வரையில் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் சின்ஜியாங் பகுதியில் தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இதுபோன்ற ஒரு துளையை உருவாக்கினர்.

குறித்த அந்த திட்டமானது துளையிடும் தொழில்நுட்பம் மற்றும் பூமியின் உள் கட்டமைப்பு பற்றிய தரவுகளை வழங்கவும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டாவது முறையாக துளையிடுவது என்பது இயற்கை எரிவாயு இருப்பு குறித்து ஆய்வு செய்யவே என கூறுகின்றனர்.

சிச்சுவான் மாகாணத்தை பொறுத்தமட்டில் சீனாவின் மிகப்பெரிய ஷேல் எரிவாயு இருப்பு இங்குதான் உள்ளது. மட்டுமின்றி, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட வெற்றி மட்டுமே கிடைத்துள்ளது.

அத்துடன் கடினமான நிலப்பரப்பு மற்றும் சிக்கலான நிலத்தடி புவியியல் காரணமாகவே அவர்களால் இயற்கை எரிவாயு தொடர்பில் முழு வீச்சில் களமிறங்க முடியாமல் போனது.

இதேவேளை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சீனா அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் எரிசக்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed