• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உரும்பிராயில் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு !

Jul 20, 2023

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவாடப்பட் டுள்ளன.

நேற்றுமுன்தினம் காலை வீட்டிலுள்ளோர் வெளியேறி மதியமே வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 பவுண் தங்க நகை என்பன திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed