• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Juli 16, 2023

பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 24,285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அத்துடன், ஒரு நாள் சேவையின் மூலம் 5 ஆயிரத்து 294 பேர் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதேச செயலகங்கள் மூலம் இணையத்தளத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முறைமையினால் கடவுசீட்டு பெற காத்திருந்த மக்களின் நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed