இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, 52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 944 இற்கும் அதிகளவானோர் டெங்கு நோயுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று 13 ஆம் திகதி முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.