• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி

Juli 12, 2023

கம்பஹாவில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று(12) அதிகாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய எஸ்.ஆர்.ருஷாங்கி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி ஆடைகளை அழுத்த மின்னழுத்தியைக் கையாண்டபோதே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed