• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுவனுக்கு எமனாக மாறிய கார்

Juli 12, 2023

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (11.07.2023) புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

உயிரிழந்த சிறுவன் தந்தையுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்களை வாங்கச் சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

இருவரும் வீதியில் நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்ததோடு சிறுவனின் தந்தை சிறுகாயங்களுடன் உயிர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய சம்பவம் தொடர்பில் காரின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed