• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மன்னம்பிட்டி பஸ் விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்களும் பலி

Juli 11, 2023

மனம்பிட்டி விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 2 கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் இவர்கள் கல்முனை அக்கரைப்பற்று பகுதியினை சேர்ந்தவர்களாகும்

பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து தொடர்பில் பஸ் மீட்கப்பட்ட பின்னரும் இன்று காலையும் கடற்படையினர், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தேடுதல் பணியை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விபத்தில் இன்று காலை வரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களும் உள்ளடங்கின்றனர்

உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை வைத்தியசாலையிலும்,

மற்றைய சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed