• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் விபத்து 

Juli 4, 2023

கிளிநொச்சி – பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி விற்பனை பொருட்களுடன் பயனித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed