ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணித்த 300 பயணிகளும் விமானியின் திறமையால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீட்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 02 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க நேரிட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஏ.33-0-300 ஏர்பஸ் விமானமாகும்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 455 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த 28ஆம் திகதி இரவு 08.20 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால் இந்த விமானத்தின் சக்கர அமைப்பு வளைந்து செல்வதாக கணனி அமைப்பினால் சுட்டிக்காட்டாததால் விமானி 02 மணித்தியால 25 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் 28 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க நடவடிக்கை எடுத்தார்.
எரிபொருளை சரியான முறையில் பயன்படுத்திய பின்னர் விமானம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து பத்திரமாக தரையிறங்கியது.
இந்த விமானத்தில் 301 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். எனினும் ஒருவருக்கும் எவ்வித பாதிக்கும் ஏற்படாத வகையில் 2 மணித்தியாலங்கள் வானில் வட்டமிட்டு தரையிறங்குவதென்பது மிகப்பெரிய சவாலாகும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விமான தனது கடமையை சிறப்பான முறையில் முன்னெடுத்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. மற்ற விமானங்கள் மூலம் பயணிகள் ஜப்பானில் உள்ள நரீடாவுக்கு அனுப்பப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.