• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

Jun 28, 2023

கிளிநொச்சியில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மற்றும் இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed