ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன.
இதேவேளை, நாட்டில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பான தரவுகளை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதத்தில் நாட்டில் செயற்பாட்டில் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,929,984 ஆக காணப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 1,952,991 கடனட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.