இலங்கையில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2023 ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரவுள்ள வர்த்தமானியின் பிரகாரம் 60 மருந்துகளின் விலைகள் 16% குறைக்கப்பட்டுள்ளது.