• Fr. Nov 1st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Jun 11, 2023

காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.

“உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், மிக முக்கியமான விஷயம் ஓய்வு, அதாவது உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் யாராவது வேலைக்குப் போகிறார் என்றால், சில நாட்கள் வேலையை விட்டுவிட்டு, அல்லது சில நாட்கள் பாடசாலைக்கு செல்லது ஓய்வாக இருங்கள்.

இரண்டாவது விஷயம், முடிந்தவரை திரவ உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டிமால் (Paracetimol) மருந்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை எடுத்துக் கொள்ளவும்.

அதைத் தவிர, மற்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். இந்த நாட்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த டிஸ்பிரின், ஆஸ்பிரின் குழு மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

அதன் மூலம் டெங்கு நோய் இருந்தால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். மரணம் வரை கூட செல்லலாம். இரண்டாவது நாளிலும் காய்ச்சல் கட்டுப்படாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறவும். முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு செல்லுங்கள்.” என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed