ஜப்பானின் வட பகுதியில் இன்று (11.06.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நில நடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
இதனால் பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் முகாமிட்டுள்ளனர்.
உரகாவா நகரின் கடற்கரை அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை
தென்னாபிரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரில் உள்ளூர் நேரப்படி இன்று (11) அதிகாலை 2.38 மணியளவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜொஹன்னஸ்பேர்க்கின் தென்கிழக்கே உள்ள அல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழப்பு அல்லது குறிப்பிடத்தக்க சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கம் நீடித்ததாகவும், வீடுகளின் சுவர்கள் குலுங்கியதாகவும் நகர மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஓர்க்னி என்ற தங்கச் சுரங்க நகருக்கு அருகில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.