யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இச் சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளான்.
விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோய்னைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளான்.
உயிர்கொல்லி ஹெரோய்ன் ஊசி மூலம் மேற்படி சிறுவன் பயன்படுத்திய நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே நேற்று கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.