ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடைய பூசாரியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.