இரத்தினபுரியில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இரத்தினபுரி பெல்மடுல்ல பகுதியில் நேற்றைய தினம் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவ் விபத்தில் குழந்தை உட்பட எண்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தும், உளவு இயந்திரமும் மோதுண்டதால் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.