• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாணவி கழுத்தறுத்து படுகொலை!

Jun 2, 2023

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று (01.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகமவைச் சேர்ந்த எஸ்.ஹிருணிகா என்ற 18 வயது உயர்தர வகுப்பு மாணவி, அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த விடயம் சில நாட்களுக்கு முன்னர் மாணவியின் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆத்திரமுற்ற மாணவியின் மூத்த சகோதரன், தங்கையுடன் நேற்றுமுன்தினம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.

இந்தச் சித்திரவதையைத் தனது காதலனுக்குக் ஹிருணிகா தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

கடும் கோபமடைந்த ஹிருணிகாவின் காதலன், ஹிருணிகாவின் மூத்த சகோதரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் காதலுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஹிருணிகாவின் மூத்த சகோதரன், காதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு சகோதரியை வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர் உடன்படாத நிலையில், கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து வெறியாட்டம் புரிந்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த ஹிருணிகாவை, அவரின் குடும்பத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவின் 25 வயதுடைய மூத்த சகோதரனையும், காதலனான 23 வயதுடைய இளைஞரையும் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed