• Mi. Dez 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பெற்றோல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு

Mai 31, 2023

எரிபொருள்களின் விலையை நள்ளிரவு (ஜூன் 1) மாற்றியமைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்று 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை லீற்றர் ஒன்று 318 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது. அதன் புதிய விலை லீற்றர் ஒன்று 385 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயினால் அதிகப்படவுள்ளது. அதன் புதிய விலை லீற்றர் ஒன்று 340 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெயின் விலை லீற்றர் ஒன்றுக்கு 50 ரூபாயினால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை லீற்றர் ஒன்று 245 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed