தனது இளைய சகோதரனுடன் சைக்கிளில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வீதியில் சென்றுகொண்டிருந்த பாரவூர்தியின் முன்பக்க கதவு கழன்று மாணவனின் மார்புப் பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வாத்துவ ஹபரலகஹலந்த பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய ககன காவிந்த என்ற பாடசாலை மாணவர் ஆவார்.
வாதுவ பகுதியில் இருந்து ஹபரலகஹலந்த நோக்கி பயணித்த பாரவூர்தியின் முன்பக்க கதவு திடீரென வீழ்ந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த இந்த மாணவனின் மார்புப் பகுதியில் மோதியுள்ளது.
விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று (25) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தியின் சாரதி வாத்துவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.