• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று அதிகரிக்கும் வெப்பம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

Mai 17, 2023

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சிலவற்றிலும்,  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள இடங்களிலும்  „கவனம்“ செலுத்தப்பட வேண்டிய  மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,  அதிக நேரம் வெளியில் இருப்பது மற்றம் வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகள் கடுமையான சோர்வினை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றதுடன், நீரிழப்பு நோய் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed