இரத்தினபுரி – கொழும்பு வீதியின் திருவனகெட்டிய பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சீரற்ற வானிலை காரணமாக குறித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடங்குகிறார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.