• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் முகநூல் தொடர்பில் கடுமையாகும் சட்டம்!

Mai 13, 2023

இலங்கையில் ஆபாச பதிவுகள் , பெண்களின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிடும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.

போலியான முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மற்றும் முகநூல் பக்க அட்மின்கள் என்போர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இழிவுபடுத்தும் வகையிலான பல முகநூல் பக்கங்கள்

நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பல முகநூல் பக்கங்கள் இயங்கி வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் போலி முகநூல் கணக்குகளின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed