• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மனி வாகனத் தொழிற்சாலை துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு !

Mai 11, 2023

ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் – பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சின்டெல்பின்கென் நகரிலுள்ள தொழிற்சாலையில் காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்த்தாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. துப்பாகிச்சூடு நடத்திய 53 வயதான இச்சந்தேக நபரை, தொழற்சாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed