யாழ்ப்பாணம் நல்லூர்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மணி வீதியும் இணைகின்ற முத்திரைச் சந்தியில் இன்று(08) காலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் தரித்து நின்றிருந்த கார் திடீரென சடுதியாக திருப்ப முற்பட்ட போது வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பெண் மீது மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.