நாரஹேன்பிட்டி இரத்த வங்கிக்கு அருகில் உள்ள பொது சுகாதார கட்டடத் தொகுதியின் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையினால், அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல், குறித்த கட்டடத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் வரை அது சீரமைக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் டெங்கு, மலேரியா, தொற்றா நோய்களுக்கான பிரிவுகள் குறித்த கட்டடத்தில் உள்ளன.
இங்கு ஆய்வு கூடங்கள் மற்றும் மருந்தகங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மின்பிறப்பாக்கியில் முன்னரும் பழுது ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது