ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் இளைஞர் யுவதிகள் இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ஜெர்மன் அரசாங்கமானது கடந்த ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது எதிர்வரும் நேற்று தொடக்கம் அவர்களுக்கு தலா 200 யூரோ வவுச்சர் வழங்கப்படும். கலாசார விடயங்களில் இவர்கள் இந்த 200 யுரோ பெறுமதியான வவுச்சரை யன்படுத்த முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக இவர்கள் கலாசார விடயங்கள் தொடர்பான நிகழ்வுகளுக்கு செல்வதற்கு அல்லது சில காட்சிகளை பார்வையிடுவதற்கும் இதனை பயன்படுத்த முடியும் என்றும்தெரிய வந்திருக்கின்றது.
இவ்வகையான இந்த 200 யூரோ பெறுமியான வவுச்சரை குறித்த ஒரு இணையத்தில் விண்ணப்பம் செய்து பெற முடியும் என்று தெரிய வந்திருக்கின்றது. அதாவது 18 வயதை அடைந்தவர்கள் இவ்வகையான இந்த 200 யுரோ பெறுமதியான வவுச்சரை பெற குறித்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும்.மேலும் இதற்காக ஜெர்மன் அரசாங்கமானது 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. இதனால் அண்ணளவாக 7 லட்சத்தி 50 ஆயிரம் பேர் பலன் பெறுவார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது