எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தற்போது பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 230 ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்று ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாவிட்டாலும் சுமார் 2 மாதங்களுக்கு போதுமான சீனி தற்போது நாட்டில் உள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மற்றைய நாடுகளில் இருந்தும் சீனி தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.