வடமராட்சி பகுதியில் குருக்கள் ஒருவரின் வீட்டில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் அதிகாலை வேளையில் கொள்ளையார்களால் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிசாரிடம் முறையிட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது. வானர் குடியிருப்பு சொக்கன்கலட்டி முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுருவான மண்டலேசக் குருக்கள் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.