• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தபால் நிலையம் உடைக்கப்பட்டு 16 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

Mai 3, 2023

குருணாகல் – கல்கமுவ தபால் நிலையம் உடைக்கப்பட்டு அங்கிருந்த 16 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 நேற்று  (02.05.2023) காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பணியிடத்திற்குள் நுழைந்தவுடன் தங்கள் அலுவலகத்தின் பின்பக்க கதவு திறந்து இருப்பதை அவதானித்துள்ளனர்.

பின்னர் அது தொடர்பில் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று அல்லது நேற்று முன்தினம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் காரணமாக இன்று (02.03.2023) தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டமையால் சேவைகளை பெறுவதற்கு வந்த மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் அறியக்கிடைக்கின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed