மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் காட்டப்பட்டாலும் மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை.
வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான வழிமுறையாகும். மாரடைப்பு வரக்கூடாது என்றால் உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
இதய நோய் பிரச்சனைகள் இல்லாதவர்கள்கூட சைலண்ட் மாரடைப்பால் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றி தெரிய வந்துள்ளது.
இதன் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருப்பதும் அதனை அசால்டாக எடுத்துக் கொள்வதும் உயிரிழப்புக்கு வழிகோலுகின்றன.
வெளிப்படையாக கூறுவது என்றால் சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிற்கு எந்தவித அறிகுறியும் இருக்காது.
சைலண்ட் ஹார்ட் அட்டாக் காரணிகள்
இதற்கான காரணங்களை ஆராயும்போது பொதுவாக கூறப்படும் காரணங்களே சைலண்ட் ஹார்ட் அட்டாக்குக்கும் சுட்டிக்காட்டப்படுகிறது.
நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், முதுமை, புகைபிடித்தல், உழைப்பில்லாத வாழ்க்கை முறை, குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் இருப்பது, அதிக கொலஸ்ட்ரால் போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் கூறப்படுகின்றன.
அறிகுறிகள் என்ன?
மார்பு வலி, மார்பில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல், பலவீனம், மயக்கம், தாடை மற்றும் கழுத்து அல்லது முதுகில் வலி, கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இருக்கும்.
மாரடைப்பை தடுப்பது எப்படி?
வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மாரடைப்பை தடுக்கலாம். குறைவான உடல் உழைப்பு, சீரற்ற தூக்கம், புகையிலை பிடித்தல், மது அருந்துவது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதல், அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.