• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா பகுதியில் ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி

Apr 29, 2023

ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலியான சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலே இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினைஇளைஞன் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கை பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் 29 வயதுமதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed