• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் மல்லாகத்தில் நகைகள் கொள்ளை: ஒருவர் கைது

Apr. 28, 2023

யாழ் மல்லாகத்தில் பட்டப்பகலில் வீடு ஒன்றை உடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 23 வயதுடையஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் (25-04-2023) செவ்வாய்க்கிழமை பட்டபகலில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed