உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள், வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 டிசம்பர் 31 க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இன்று முதல் மே 02 வரை ஒன்லைன் முறையில் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது