நாட்டில் அதிக வெப்பம் காரணமாக எப்பாவல மடியாவ பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல நகர சபை மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 81 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
அதேசமயம் அதிக வெப்பம் காரணமாக 02 சந்தர்ப்பங்களில் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.