• Mo.. Apr. 7th, 2025 7:01:52 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.கொடிகாமம் வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Apr. 26, 2023

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் கொடிகாமம், எருவன் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரமாக இருந்த காணிக்குள் பாய்ந்து பனை வடலியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளவாலைப் பகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலமும் அங்கு வைக்கப்பட்டு;ள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed