• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மரண வீட்டிற்கு சென்ற சகோதரர்கள்  இருவர் பலி

Apr 26, 2023

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள்   இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி  குறித்த  சகோதரர்கள்  உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சகோரதர்கள்  உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து மரண வீடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக்கொண்டிருக்கும்போது நீரில் அவர் தத்தளிப்பதைக் கண்டு, மூத்த சகோதரர் அவரை காப்பாற்ற முற்படும்போதே இருவரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed