கென்ய நாட்டில் மத போதகரின் பண்ணை தோட்டத்தில் 47 உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள பிரபமானன பகுதி மாலிண்டி. இப்பகுதியில் வசிப்பவர் பால் மெகன்சி. இவர் ஒரு மதபோதகராக இருந்து வருகிறார்.
இப்பகுதியில் இவருக்கு பண்ணை நிலம் உள்ள நிலையில், இங்கு பலர் தங்கியுள்ளனர்.
இப்பண்ணையில் வசிக்கும் பலரின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே, இதுகுறித்து, போலீஸார் சோதனை நடத்தினர். அதில், பண்ணைக்குச் சொந்தமமான இடத்தில் தோண்டியபோது, 21 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்தது மேலும், 26 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தமாக 47 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலைய்ல், அவர்கள் எப்படி இறந்தனர் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கென்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.