• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் இருந்து ஐவர் சடலங்கள் மீட்பு!

Apr. 23, 2023

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் , 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரி, 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 100 வயதான கனகம் பூரணம் என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed