• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். ஊரெழு பகுதியில் வீடொன்றினுள் நுழைந்து மர்ம கும்பல் தாக்குதல்.

Apr. 22, 2023

யாழில் வீடொன்றினுள் நுழைந்த மர்ம கும்பலால் வீட்டில் இருந்த உடமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 இற்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் வீட்டின் யன்னல் கண்ணாடிகள், கதவுகள், வீட்டில் இருந்த உடைமைகள் என்பவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது மர்மநபர்கள் தங்கள் முகங்களை மறைத்து முகமூடிகளை அணிந்து இருந்ததாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. இந்த , தாக்குதலினால் 02 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed