• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விவசாயிகளுக்கு இலவச யூரியா உரம்

Apr 21, 2023

விவசாய குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகளை வழங்க உள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UNFAO) இணைந்து யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை அமைச்சிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே விவசாய அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து இந்த வருடம் விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை விவசாய அமைச்சுக்கு வழங்கியுள்ளன.

இது ஏழு மாவட்டங்களில் உள்ள 71,000 விவசாய குடும்பங்களுக்கு இந்த இலவச யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

இவை பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ½ ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அதிக விளைச்சலைப் பெற புதிய செய்கை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாராசூட் நெல் செய்கை முறையை ஊக்குவிப்பதற்கு, விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை வழங்கத் தேவையான ஆதரவையும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed