• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் குடும்பம்

Apr 20, 2023

இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் நேற்று காலை தமிழகம் அரிச்சல் முனை பகுதிக்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக புறப்பட்ட ஐவரே தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தேக்கம் தோட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மற்றும் 3 சிறுவர்களே இவ்வாறு தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களிடம் தமிழக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed