• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கோவிட் தொற்று! 5 பேர் தனிமைப்படுத்தலில்

Apr. 19, 2023

யாழ். குடாநாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கோவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதால் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கோவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டபோது சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்பின் அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed