• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று அமாவாசை தினம் இதை செய்தால் உகந்தது

Apr 19, 2023

சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி இன்றைய (19) தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இது முன்னோரை வழிபட ஏற்ற நாளாக விளங்கி வருகிறது.

இந்த சித்திரை மாதம் வரும் அமாவாசை திதியை, வைஷாக அமாவாசை என்பார்கள். இந்த புதிய சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி இன்று (ஏப்ரல் 19) காலை 11:23 மணியில் தொடங்கி ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 9.41 மணி வரைக்கும் இருக்கிறது.

இந்த நாளில் முன்னோரை வேண்டி வணங்கினால் எல்லா துன்பமும் விலகும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு ஆண்டும் முன்னோர் இறந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதோடு நிறுத்தி கொள்கிறார்கள். ஆனால் ஒரு ஆண்டுக்கு 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

முன்னோர்களை வழிபாடும் முறை

அதுமட்டுமில்லை ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை திதியிலும் தர்ப்பணம் கொடுத்து முன்னோரை வழிபடலாம் என்று கூறப்படுகிறது.

எப்போதும் அமாவாசை தினங்களில் காலையில் எழுந்து நீராடிவிட்டு, முன்னோர் படங்களுக்கு மாலை அணிவித்து வணங்க வேண்டும்.குடும்பமாக முன்னோர் படங்களின் முன்பு நின்று வணங்கி ஆசி பெற வேண்டும். சந்ததி தழைத்தோங்க மனதில் வேண்டிக் கொண்டே ஆசி பெற்று கொள்ளுங்கள்.

இன்றைய தினம் குறைந்தபட்சம் 1 அல்லது 4 முதல் 5 பேருக்கு ஏதேனும் உணவளிப்பது நன்மை தரும். இப்படி தானம் செய்வதால் முன்னோர் ஆசி கிடைக்கும். தானம் கொடுக்க கொடுக்க புண்ணியம் சேரும். இதனால் வம்சம் வாழையடி வாழையாய் தழைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பித்ரு தோஷம் நீங்க

யாரேனும் தங்களுடைய பரம்பரையில் காலமான முன்னோருக்கு முறையாக திதி கொடுக்காமல் விட்டால் அவர்ககுக்கு பித்ரு தோஷம் ஏற்படும்.

அப்படி ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் ஆகிவிடும். இதை சரிசெய்ய வைஷாக அமாவாசை நாளான இன்று அதிகாலையில் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் தலை மூழ்கி நீராட வேண்டும்.

பின்னர் மறைந்த முன்னோருக்கு திதி கொடுக்க வேண்டும். இந்நாளில் ஏழை எளியோருக்கு இயன்ற தானம் செய்யலாம்.

இதனால் முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். பித்ரு தோஷங்கள் கூட விலகி வாழ்க்கை வளமாகும்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed