• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இடம் பெற்ற கோர விபத்து; 6 குழந்தைகள் படுகாயம்

Apr. 16, 2023

வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கெப் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேற்று (15 ) மாலை 4.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 6 குழந்தைகள், 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed