• Do. Dez 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குழந்தை பெற்றால் பல சலுகைகள்

Apr 14, 2023

உலகின் பல நாடுகளில் மாறி வரும் கலாச்சார மாற்றத்தால் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றது.

இந்த நிலையில் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறப்பது குறைந்துள்ளது.

இதனால் அங்கு  புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இளைஞர்களையும்  திருமணம் செய்யுமாறும்  அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளதுடன்  பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த அந்நாட்டு அரசு தொடர்ந்து பல திட்டங்களை  தென் கொரியா அறிவித்து வருகின்றது.

முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு $1500 டொலர் வழங்கப்படுவதாக கடந்த 2022 ஆம் ஆண்டே அந்நாடு அறிவித்துள்ளதுடன்  தற்போது புதிதாக பல சலுகைகளை வழங்கியுள்ளது.

1 வயதுக் குழந்தைகளின் பராமரிப்புக்காக சுமார் $528 டொலர்களை வழங்குகின்றது. இதற்குப் பின்னர்  குழந்தைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் $264 டொலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளதுடன்  2024-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை தொடர்வது குறித்தும்  அரசு ஆலோசனை செய்துள்ளது.

புதிய திட்டத்தின் படி 1 வயது வரையிலான குழந்தைக்கு $755 டொலர்களும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு, $377 டொலர்களும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதே போல் ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளும் மக்கள் தொகை குறைபாட்டை கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed