• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

Apr 13, 2023

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேசத்தில் வசித்துவரும்  சிறுவன் நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று (13.04.2023) உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு – உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற 04 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவன் சளி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (12.04.2023)  புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனைகள் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சிறுவன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed